சூடு பிடிக்கும் தென்னிலங்கை தேர்தல் களம். தேர்தலுக்காக கூட்டு சேரும் ரணில் சஜீத்

0

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமை பதவிக்காக முன்னால் பிரதமரும் தற்போதைய தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவோடு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஏட்டிக்கு போட்டியாக நின்றமை நாடறிந்த உண்மை.

ஐனாதிபதி தேர்தலுக்கு முன்பாக ஜக்கிய தேசிய முன்னணிக்குள் தலைமை மற்றும் ஐனாதிபதி வேட்பாளர் யார் என்ற இழுபறி, கட்சிக்குள் இருகுழுக்களாக பிளவு என்பன அந்த கட்சிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாக பிரியும் வாக்கு வங்கி சிதறும் எனவும் தற்போதைய ஜனாதிபதி சார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மையை நிருபிப்பதற்க்கு சாதமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்..

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவதே ஒரே இலக்கு இதற்க்காக தலைவர் ரணில் விக்கிரம சிங்காவையும் , ஏனைய பங்காளி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு புதிய கூட்டணி அமைப்போம் என சஜீத்பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்தொன்றினை வெளியிட்டுள்ளமை தென்னிலங்கை அரசியல் களத்தில் புதிய சவாலொன்றை ஏற்படுத்தியிருக்கிறது.