செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு – சவேந்திர சில்வா!

0

நாட்டில் பாரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றப் பின்னர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்காகவும் நாட்டை திறக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.