செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய செய்மதியை வடிவமைக்க உதவிய இலங்கை பெண்

0

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ முடியுமா என ஆராய்வதற்காக ரோவர் என்ற விண்கலம் ஒன்றை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.

ஒரு டன் நிறையுடைய ரோவர் விண்கலம் நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரிப்பதாகவும் அதனை பூமிக்கு கொண்டு வரும் நோக்கில் விண்கலம் ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வு உபகரணத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெண் பொறியியலாளர் ஒருவர் உதவியுள்ளார்.

மெலனி நிலந்தி மஹஆராச்சி எனப்படும் இந்த பொறியியலாளர், அமெரிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் தொடர்பான கல்வி தொடர்பில் பட்டப்படிப்பு ஒன்றை பயின்று வருகிறார்.

கொழும்பில் பிறந்த அவர் கஸ்கிஸ்ஸ மகளிர் வித்தியாலயத்திலும் பம்பலப்பிட்டி தூய பவுல் மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாகும்.

2003ஆம் ஆண்டு தனது கணவன் மற்றும் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் குடியேறியவர் பின்னர் கல்போர்னியா பல்கலைக்கழகத்தில் ஆரம்ப பட்டப்படிப்பை பெற்று, விமானம் தயாரிக்கும் பொறியியல் துறையில் தனது தொழிலை தெரிவு செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அவர் நாசா நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

“Mars Rover” என்ற இயந்திரத்தின் மின்சுற்றின் இயந்திர வடிவமைப்பை (Electrical system mechanical layout) தயாரிப்பதற்கு முழுமையான உதவிகளை அவர் மேற்கொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.