சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் திரட்டு!

0

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பெப்ரல் அமைப்பின்  நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடாத வேட்பாளர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்காவிடின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.