ஜனவரி மாதம் முன்பள்ளிகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்!

0

எதிர்வரும் ஜனவரி மாதம் முன்பள்ளிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை இது குறித்த தீர்மானங்களை அமுல்படுத்த முடியாதுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்பள்ளி கொள்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான சட்டமூலத்தை கல்வி அமைச்சர் பேராசியிர் G.L.பீரிஸிடம் கையளிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.