ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் – ரோஹித்த அபேகுணவர்தன

0

ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகுமென அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் வேலைத்திட்டங்களை தடைகள் இன்றி முன்னெடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் கொண்டுவரப்படவேண்டியது அவசியமாகும்.

எதிர்க்கட்சித் தலைவரையும் கூடவே வைத்துக்கொண்டு ஒரு அரசாங்கத்தை கொண்டு செல்லும் நிலைப்பாட்டிலேயே 19 ஆவது சரத்து கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திருத்தமானது நாட்டுக்கு பாதகமானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவர நாம் அனைவரும் அமைச்சரவை என்ற ரீதியில் அனுமதி வழங்கினோம்.

எமக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க கூடிய அரசாங்கம் வேண்டும் அதற்காகவே ஜனாதிபதிக்கு மக்கள் வாக்களித்தனர்.

அவ்வாறு திட்டங்களை முன்னெடுக்க தடைகள் இருக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த அதே விடயங்களை முன்னெடுப்பதற்கு எங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த, பாதாள உல செயற்பாடுகளை இல்லாது செய்ய, போதைபொருள் விற்பனையை இல்லாது செய்ய, அதற்கு ஜனாதிபதி தலைமையான அரசாங்கத்திற்கு பலம் வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.