ஜனாதிபதியினை விமர்சித்தால் இடமாற்றமா? சபையில் சாணக்கியன் கேள்வி!

0

அரச ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதற்காக, ஒழுங்கு நடவடிக்கை அல்லது இடமாற்றங்கள் மூலம் தண்டிக்கப்படலாமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவிடம் நேற்று இந்த கேள்வியை எழுப்பினார்.

போக்குவரத்து அமைச்சின் மாவட்ட மருத்துவ நிறுவனத்தின் இரண்டு பெண் ஊழியர்கள் ஜனாதிபதிக்கு எதிரான தனிப்பட்ட கருத்துக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டதற்காக மாற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே, இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் முடிவை பொதுமக்களுக்கு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.