ஜனாதிபதியின் அணுகுமுறை நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் – ஐ.தே.க. எச்சரிக்கை

0

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தா இலங்கையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு ஜனாதிபதியின் அணுகு முறைகள் நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் எனவும் ஐ.தே.க உறுப்பினர் வஜிர அபேவர்தன எச்சரித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் , உலக சுகாதார அமைப்பு , ஐ.நா மனித உரிமைகள் பேரவை , ஆசிய அபிவிருத்தி வங்கி  மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட எந்த அமைப்பிடனுனான உறுப்புரிமையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ள போகிறார் என்பதை நாட்டு  மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறுப்புரிமையை இலங்கை நீக்கிக்கொண்டால் ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் ஆடை உற்பத்திய மற்றும் மீன் ஏற்றுமதி என்பன முற்றாக நிறுத்தப்படும் என்றும் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பேரடியாகவே அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே ஜனாதிபதி இதில் எந்த அமைப்பிலிருந்து இலங்கையின் உறுப்புரிமையை நீக்கிக்கொள்வார் என்பதை அறிவிப்பது சிறந்தது என்றும் அப்போதுதான் நாட்டு மக்களுக்கு தற்போதைய ஜனாதிபதி குறித்து தெளிவு ஏற்படும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.