ஜனாதிபதியை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள்

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே இன்று (17) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.