ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதிவரை அதன் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
ETI நிதி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் நிதிமோசடிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கட்டமை குறிப்பிடத்தக்கது.