ஜனாதிபதி கோட்டபாயவின் நியமனங்களுக்கு எதிராக அழுத்தம்!

0

அண்மையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சில பதவிகளுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் முக்கியமான விடயங்களை ஆராய்ந்து பார்த்து இந்த நியமிப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆழமாக சிந்தித்து பார்த்து நியமிக்கப்பட்ட பதவிகளுக்கு பல்வேறு அழுத்தங்கள் காரணமாக மாற்றம் மேற்கொண்டு, வேறு நபர்களை நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நியமிக்கப்பட்ட அனைத்து நபர்களினதும், தேசபக்தி, தகுதி மற்றும் பின்னணிகளை கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்ட நியமனங்களுக்கு எதிராக கருத்து வெளியிடுவதனால் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியாமல் போவதுடன், அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் இதன் காரணமாக பலவீனமடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.