ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

இதற்கமைய, அவர் இன்று(புதன்கிழமை) இரவு 8.30 மணிக்கு  நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்றது.

இந்தநிலையிலேயே  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

இதன்போது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார்  என எதிர்பார்க்கப்படுகின்றது.