ஜனாதிபதி பிள்ளையானுக்கு வழங்கிய விசேட பதவி!

0

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உறுதிப்படுத்தப்பட்டு  ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் பிள்ளையானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனக் கடிதத்தில் மாவட்டத்தினது அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்படி நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.