ஜுன் 8ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுகிறதா? வெளியாகியுள்ள தகவல்

0

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை பொது மக்கள் கடைப்பிடித்து, பொறுப்புடன் நடந்து கொண்டால், ஜூன் 8 ஆம் திகதி கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.