ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? – மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில், பங்கேற்குமாறு மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அதன் செயலாளர், சட்ட வல்லுனர்கள் மற்றும் சுகாதார பரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபை தேர்தலை நடத்துவதா? இல்லையா, தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.