ஜெனிவா பிரேரணை தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வழியமைக்கவில்லை: தமிழீழ விடுதலை இயக்கம்

0

ஜெனிவா பிரேரணையில் உள்வாங்கப்பட்ட விடயங்கள் நீதி வேண்டி நிற்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேச ரீதியில் பரிகார நீதியை பெற்றுக்கொள்ள வழி அமைக்கவில்லை என தமிழீழ விடுதலை இயக்கம் கவலை தெரிவித்துள்ளது.

நீதியைப் பெற சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் ஆதரவு மிக அவசியம் என தமிழீழ விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

நடுநிலைமை போக்கானது தமிழ் தேசிய இனம் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்தியாவினுடைய ஆதரவைப் பெறுவதற்கு அரசியல் ரீதியான நகர்வினை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் முதற்படியாக இந்திய பிரதமர் உட்பட அரசியல் தலைவர்களை சந்திக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.