ஜெனிவா மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு இன்று ஆரம்பம்

0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவைளின் 48வது அமர்வு இன்று (13) ஆரம்பமாகவுள்ளது.

ஜெனிவா நகரிலுள்ள மனித உரிமை பேரவையின் தலைமையகத்தில் இந்த அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பமாகும் அமர்வு, எதிர்வரும் 8ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் சிலவற்றின் மனித உரிமை தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிஷேல் பெஷல் இன்று வெளியிடவுள்ளார்.