டக்ளஸ், சாணக்கியன் தொடர்பில் வியாழேந்திரன் வெளிநாட்டிற்கு பகிர்ந்த இரகசிய தகவல் – வியாழேந்திரனின் உண்மை முகம் அம்பலமானது!

0

வியாழேந்திரனிடம் இருந்து பிரிந்து சென்று அமைச்சர் டக்ளஸ் உடன் இணைந்த ஒருவர் தொடர்பிலும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முஸ்லீம் அரசியல் பிரமுகர்களுடன் நாடாளுமன்றத்தில் கதைத்துக் கொண்டிருக்கும் போது அந்த புகைப்படங்களை எடுத்து தனக்கு அனுப்புவதாகவும், அது தொடர்பில் தான் முகநூல் பக்கங்களில் அவர்களுக்கு எதிராக எழுதும்படி வியாழேந்திரன் முகநூலின் மசன்சர் பக்கத்தினூடாக தகவல்களைப் பரிமாறியதாக முற்போக்கு தமிழர் அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் அழகை அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் தொடர்பு கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில நடவடிக்கையின் பிரதிபலனாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கையிழந்து பலபேரில் நானும் ஒருவன். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்ற ஒன்று அடிமட்டத்தில் காணப்படுகிறது.

தற்சமயம் ராஜாங்க அமைச்சராகவுள்ள சதாசிவம் வியாழேந்திரன் என்பவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியான காலகட்டத்தில் அவரோடு நான் முகநூல் வாயிலாக இணைந்து கொண்டேன்.

அதன் பின் அவருடைய செயற்பாடு அத்தனையும் மக்களைக் கவரக்கூடிய வகையில் அமைந்திருந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.