டிசம்பா் இறுதிவரை வரையரைகளுடன் செயற்படுக – சுகாதார பிரிவு எச்சரிக்கை

0

நாடு திறக்கப்பட்டுள்ளது என்றாலும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துதடை இன்னும் நீக்கப்பட வில்லை. இன்னும் கொரோனா பரவல் நிலை முழுமையாக தனியவில்லை என்றும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரையிலுமாவது வரையரைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவர்தன தெரிவித்தள்ளாா்.

புதுவருடத்தின் பின்னர் இடம்பெற்ற தேவையற்ற சுற்றுலாபயணங்களின் காரணமாகவே நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டது என்றும் கடந்த கால நிலைமைகளை தொடர்பில் சிந்தித்து மக்கள் செயற்பட வேண்டியது அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

பதுளை பிரதேசத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.