டீசலின் விலை 75 ரூபாயினாலும், பெற்றோலின் விலை 50 ரூபாயினாலும் அதிகரிப்பு

0

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது, இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக Petrol 92-Octane 254 ரூபாவிற்கும், டீசல் 214 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.