டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமம்-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

0

இன்னும் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே தங்களிடம் இருப்பதாகஅகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது .

தனியார் பேருந்து நடத்துனர்கள் டீசலை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்க எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்துமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.