டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்!

0

டுபாயில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 197 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 226 என்ற விமானத்தில் இன்று(வியாழக்கிழமை) காலை 6.20 அளவில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள குறித்த பிரஜைகளுக்கு இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த அனைவரும் இராணுவத்தினரால் விசேட பேரூந்துகள் மூலம் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.