டெங்கு, கொரோனா ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம்!

0

டெங்கு மற்றும் கொரோனா தொற்று ஆகியவற்றுக்கான நோய் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அநுர ஜயசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நோய் அறிகுறிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், உரிய வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோய் மேலும் அதிகரிக்குமெனவும் வைத்தியர் அநுர ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மை சூழவுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது பொது மக்களின் பொறுப்பாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.