டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்

0

மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

53 வயதான பெண் தற்போது தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

டெல்டா மாறுபாடு மாதிவெலவில் பரவி வருவதாக சந்தேகம் எழுந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையிலேயே மாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்டா மாறுபாடு முதன்முதலில் தெமடகொட பகுதியில் கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என்று சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.