டெல்டா வகை கொரோனா தொற்றைக் கண்டறிய விசேட பரிசோதனைகள்

0

இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் வாரங்களில் நாடு முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ்,  முதல் முதலாக கொழும்பிலேயே கண்டறியப்பட்டிருந்தது.

இதேவேளை இதுவரை காலமும் பரிசோதனைக்கு பயன்படுத்திய கருவிகளுக்கு மாறாக, OXFORD NANO  தொழிநுட்பத்தை முதன் முறையாக பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.