தங்கம் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்

0

உலக சந்தையில் கடந்த வாரம் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய கடந்த வாரத்தில் 4.5 வீதம் வரை தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.

தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1800 அமெரிக்க டொலர் வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்டெம்பர் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு நிலையிலேயே காணப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் அவுன்ஸின் தங்கத்தின் விலை 2075 அமெரிக்க டொலர் வரை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.