தங்கையை கொன்ற அக்கா!!கணவனுடன் உடல் உறவு!! மன்னார் கொலையில் நடந்தது என்ன??

0

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்காதல் விவகாரம் ஒன்றினாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

கடந்த 13ஆம் திகதி மன்னார் உப்பளத்தில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
அந்த யுவதி யார் என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில், அவர் யாழ்ப்பாண யுவதி என்ற தகவலை
தமிழ்பக்கம் நேற்று முதலில் வெளியிட்டிருந்தது.

நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜூயின் (21) என்பவரே சடலமாக மீட்கபபட்டார்.

அவரது உடன்பிறந்த சகோதரியே கொலை சூத்திரதாரி.

அவரது கணவருக்கும், உயிரிழந்த யுவதிக்குமிடையில் கள்ளக்காதல் ஏற்பட்டதையடுத்தே அவர்
ஆத்திரத்தில் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலமளித்துள்ளார்.

இந்த கொலை தொடர்பான மர்மம் நீடித்து வந்த நிலையில், மன்னார் நகரிலுள்ள உணவகம் ஒன்றின்
சிசிரிவி கமராவில் கிடைத்த காட்சிகளே துப்புத்துலக்க உதவின. உயிரிழந்த யுவதியும்,
மேலும் இரு பெண்களும் உணவருந்தும் காட்சிகள் கிடைத்தன.

இதனடிப்படையில் பொலிசார் நடத்திய விசாரணையில் நெடுந்தீவை சேர்ந்த சகோதரியும், இன்னொரு
பெண்ணும் கைதாகினர்.

செட்டிக்குளத்தில் வசிக்கும் தமது மாமா முறையானவருடன் இணைந்தே இந்த கொலையை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் தாயார் வெளிநாட்டில் உள்ளார். தந்தை காலமாகி விட்டார். தாயாரின்
சகோதரரே செட்டிக்குளத்தில் வசிக்கிறார். அவர் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுடன் இணைந்து
பணியாற்றியவர்.

யுவதியையும் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும், கொழும்பில் சில ஆவணங்களை தயார் செய்ய
வேண்டுமென்றும் கூறியே, நெடுந்தீவில் இருந்து முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு சென்றனர்.
இதன்போது உயிரிழந்த பெண், அவரது கூடப்பிறந்த சகோதரி, பெரியதாயின் மகனின் மனைவி
ஆகியோரே சென்றனர்.

அவர்கள் மன்னார் நகரில் உணவருந்தி விட்டு, நகரில் சிறிதுநேரம் உலாவிவிட்டு, உப்பளப்பக்கம்
யாருமில்லையென தெரிந்ததும், இயற்கை கடன் கழிப்பதை போல அங்கு சென்று, யுவதியை கொன்றுள்ளனர்.

மாமன் கழுத்தை நெரிக்க, மற்றைய இரண்டு பெண்களும் கால், கைகளை பிடித்து வைத்துள்ளனர்.
யுவதியின் உயிர் பிரிந்ததும், சடலத்தை வீசிவிட்டு வந்துள்ளனர்.