தடுப்பூசி அட்டைகளில் புதிய மென்பொருள்!

0

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களில் சஞ்சரிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம் மாத இறுதிக்குள் இந்த நடவடிக்கை நிறைவு செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.