தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படலாம்!

0

தடுப்பூசியின் முதல் குப்பி செலுத்தப்பட்ட பின்னரும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் முதல் குப்பி செலுத்தலின் பிறகு 12 வார காலத்திற்கு ஒரு பெறுநருக்கு பாதுகாப்பு உள்ளது.

இந்தநிலையில் முதல் குப்பி செலுத்தலுக்கு பிறகு ஒருவர் வைரஸால் பாதிக்கப்படலாம் என்றாலும், கடுமையான அறிகுறிகளில் இருந்தும் வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்தும் அவரை பாதுகாக்கும் திறன் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், தற்போது அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள் அதிகரித்திருப்பதற்கான காரணம், முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டம். மற்றும் குறிப்பாக நுவரெலியா மற்றும் கதிர்காமத்துக்கு சென்றமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.