தடையினை கணக்கில் எடுக்காது இரவு கேளிக்கை விருந்து – பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கைது

0

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளையும் மீறி இரவு கேளிக்கை விருந்தை நடத்திய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை, மஸ்ஸல பகுதியில் நான்கு மாடி வீடொன்றில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகநூல் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட இரவு கேளிக்கை விருந்தை நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருட்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் சில பெண்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக மக்கள் அதிகம் ஒன்று கூடவும், கேளிக்கை நிகழ்வுகளை நடாத்தவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.