தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் உற்பத்தி பொருட்களை கண்டறிய விசேட சுற்றிவளைப்பு!

0

தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறியும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பீ.பி ஹேமந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராமுக்கும் குறைவான நிறையுடைய செசே பைக்கற்றுக்கள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் அவ்வாறான தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்திகளில் சில நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, கெஸ்பேவ – ஜம்புரெலிய பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் தடை செய்யப்பட்ட 3,000  செசே பைக்கற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.