தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களை புகழ்ந்து கருத்து வெளியிடுவதன் ஊடாக, பொதுமக்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையிலான சட்டமூலமொன்றை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஹிட்லர் மற்றும் நாஜி படைகளை புகழ்ந்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறு பேசினால், சிறை தண்டனை அனுபவிக்க நேரும் என அமைச்சர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை இல்லாததன் காரணமாக, இனவாத குழுவினர் அதன் ஊடாக தேவையற்ற நன்மைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.