தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக இருந்தாலும் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரணமாக இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நினைவு நிகழ்வினை நடாத்துவதற்கு யாழ்ப்பாண காவல்துறையினர் ஆரம்பத்தில் அனுமதித்திருக்கவில்லை. பின்னர் சமூக இடைவெளியினை கடைப்பிடித்து அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதற்கமைய ஒவ்வொருவராக சென்று தந்தை செல்வா நினைவு தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ் மாநகர முதல்வர் ஆனல்ட், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.