தனக்கு ஆலோசனை வழங்கவே ஞானசார தேரரை தெரிவு செய்தேன்- ஜனாதிபதி

0

ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை வரைபை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைமை பதவி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டமையானது தனக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே தவிர நாட்டுக்கு நீதியை வழங்குவதற்காக அல்லவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இததை் தெரிவித்தார்.

தான் செய்யும் சொல்லும் அனைத்திற்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனைப் பெற சென்றால், தனக்கு தேவையான நண்பர்களை தெரிவு செய்வதற்கும் அவர்களிம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்படுமெனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சராக அலி சப்ரியை தெரிவு செய்த சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எதிர்ப்புகள் வந்ததாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.