தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்தும் தனிமைப்படுத்துவதா?

0

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்தும் தனிமைப்படுத்துவதா? அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை தளர்த்துவதா? என்பது தொடர்பில் இந்த வாரம் தீர்மானம் எட்டப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் தாம் நாளாந்தம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சில தோட்டங்கள் மற்றும் தொடர்மாடி குடியிருப்புக்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுதவிர்த்து ஏனைய பகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து இந்த வாரத்திற்குள் தீர்மானமொன்றை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவ தளபதி கூறுகின்றார்.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளிலுள்ள 24 பொலிஸ் பிரிவுகள் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.