தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 130 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 77 பேர் நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் இதுவரையில் ஆயிரத்து 665 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பை பூர்த்தி செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது, இரண்டாயிரம் 96 பேர் இந்த நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.