தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பெண் கைதி தப்பியோட்டம்

0

களுத்துறை வடக்கு சிறிலந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் நேற்று தப்பிச் சென்றுள்ளார்.

கொரோனா தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பெண் கைதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் கைதி ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.