தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 126 பேர் விடுவிப்பு

0

கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 126 பேர் வௌியேறியுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்று வரை 25,316 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நாட்டில் அமைந்துள்ள 47 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,984 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.