இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து மேலும் 14 பேர் இன்று (திங்கட்கிழமை) வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.
இவர்கள் இன்று மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் அவர்களுக்கு இதன்போது வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, 27 ஆயிரத்து 907 பேர் இதுவரையில் தமது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.