தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய மேலும் 829 பேர் கைது!

0

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.