தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது!

0

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பியோடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இணைக்கப்பட்ட நபரொருவர் அங்கிருந்து மேலும் இருவருடன் தப்பியோடி, லொறி ஒன்றில் பயணித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு, பெரகல நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும், தியத்தலாவை இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.