தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்றாவது குழுவும் வெளியேறியது!

0

தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்றாவது குழுவினர் இன்று(வியாழக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

223 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டக்காட்டிலிருந்து 42 பேரும், பூனாணையிலிருந்து 125 பேரும், தியத்தலாவையிலிருந்து 38 பேரும், மியான்குளத்திலிருந்து 18 பேரும் இவ்வாறு அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களில் இதேபோன்று இரண்டு குழுக்கள் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து வெளியேறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.