தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 41 பேர் கைது

0

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய மேலும் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய ஆயிரத்து 256 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.