தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினால் என்ன தண்டனை?

0

தனிமைப்படுத்தல் விதிகளை மீறய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் நீதிமன்றினால் விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

எனினும் குறித்த குற்றத்திற்காக தினமும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 190 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49,449 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.