தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய செய்தி

0

1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் வேலைவாய்ப்பு காப்புறுதி இறுதி செய்வதற்கான (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரும் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின படி அதிகபட்ச இழப்பீட்டு தெகையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

தற்போது, 2003 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் வேலைவாய்ப்பு காப்புறுதி இறுதி செய்வதற்கான (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பயன்பாட்டில் உள்ளது. 

குறிப்பாக தொழிலாளர் ஒருவர் தொழிலிருந்து நிறுத்தப்பட்டவுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதற்கான ஒரு சூத்திரத்தை இந்த சட்டம் அறிமுகப்படுத்துகிறது. 

இந்த விசேட சூத்திரத்தின் கீழ் கணக்கிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை 1,250,000 ரூபாய்க்கு அதிகரிக்காமல் இருக்க வேண்டும். 

ஏதேனும் காரணங்களுக்காக தொழிலாளரை நீக்குதல் மற்றும் நிறுவனத்தை மூட நேரிட்டால் அதிகபடியான மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியருக்கு கிடைக்கும் நட்டஈட்டு தொகை குறைவாக உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு, தொழில் அமைச்சரின் கோரிக்கைபடி இழப்பீட்டுத் தொகையை அதிகபட்சமாக 1,250,000 ரூபாவிலிருந்து 2,500,000 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.