தனியார் பேருந்துகள் எப்போது வழமைக்கு திரும்புகின்றன தெரியுமா?

0

தனியார் பேருந்துகளை வழமைக்கு கொண்டு வருவது குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகளுக்கு இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தற்போது குறைந்தளவிலான தனியார் பேருந்துகளே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. அந்த சேவையை வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, தற்போதைய ரயில் நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான வார நாட்களில் ரயில்களில் பயணிக்கக்கூடிய அரச மற்றும் தனியார் சேவையாளர்கள் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு ரயில்வே பிரதி பொது முகாமையாளர் டீ.எச்.பொல்வத்தகே நிறுவன பிரதானிகளிடம் கோரியுள்ளார்.

அந்த தரவுகளை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் வாரத்திற்கான ரயில் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.