தனியார் பேருந்து சேவைகளை 50 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை!

0

தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இந்த திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு மக்களே பேருந்து சேவையை பயன்படுத்துவதால் ஏற்படும் நட்டத்தினை ஈடுசெய்வதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் பேருந்து சேவையை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமான சலுகைகளை தாங்கள் கோரியபோதிலும் அவை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.