தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை அடுத்த மாதம் முன்வைக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையிலும் புதிய முறைமையை வகுக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண தபால் முத்திரை கட்டணம் 15 ரூபாயாக காணப்படுகின்றது. எனினும் அதற்காக திணைக்களம் 22 ரூபாய் 75 சதத்தை செலவு செய்வதாகவும், துரித தபால் சேவைக்காக 50 ரூபாய் அறவிடும் நிலையில் தனியார் பிரிவுகள் அதற்காக 250 ரூபாயை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.