தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் பணிபகிஸ்கரிப்பு!

0

பல முக்கிய அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் இந்த பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தபால் சேவைக்கு புதிய பணியாளர்களை நியமிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறையினை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய கடமைகள் மற்றும் பொது சேவைகளை பராமரிப்பதற்காக ஊழியர்களின் விடுமுறைகள் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.