தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பு வெளியீடு

0

பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.